Home > Uncategorized > அணு உலைகளும் மறைக்கப்படும் மர்மங்களும்

அணு உலைகளும் மறைக்கப்படும் மர்மங்களும்

எல்லோரும் குறிப்பாக திராவிட கழகங்கள், மாவோயிஸ்டுகள், இலங்கை தமிழர் வாழ்க்கை நாசம் செய்யபடும் பொழுது தூங்கி கொண்டு இருந்த வீரர்கள்  அணு உலையை பற்றியும் அணு உலைகளை பற்றி தான் பக்கம் பக்கமாக எழுதி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாவற்றையும் விட சாதாரண பொது மக்களுக்கு தெரியாத மற்றொறு விசயம் உண்டு. அமெரிக்கா தயாரித்து கொண்டு இருக்கும் சக்தி மிக்க மனித அணுகுண்டுகளை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இது சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகளை பற்றி பதிவின் முடிவில் விரிவாக எழுதவுள்ளேன்.

மேலே உள்ள படம் தான் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சக்தி வரைபடம். இதன் படி வெறும் 3% வீதம் மின்சாரம் தான் அணுமின் நிலையத்தில் இருந்து வருகிறது. நமக்கு அனல் மின் மற்றும் நீர் மின்சக்தியில் இருந்து தான் அதிக மின்சாரம் கிடைக்கிறது. நிலைமை இப்படி இருக்க சிலர் தனது சுய நலத்திற்காக கேடு விளைக்கும் அணு உலையில் மக்கள் வரிபணத்தை கொட்டுகிறார்கள் அது வெடித்தால் பல ஆயிரகணக்கான மக்கள் உயிர் இழப்பார்கள். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று பெரிய பந்தல் போட்டு வெள்ளை பாவாடைகளும் சிகப்பு சட்டைகளும் பேசி கொண்டு இருக்கின்றன. இதை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஒரு விசயம் உள்ளது. அது தான் குறைந்து வரும் நீர் சக்தி மற்றும் எரிசக்தி.

குறைந்து வரும் நிலக்கரி அளவை குறிக்கும் வரைபடம்.

குறைந்து வரும் நீர் வளத்தை குறிக்கும் படம்

மேலே உலகில் இருக்கும் நிலக்கரி உற்பத்தியின் அளவை பற்றிய வரைபடம் உள்ளது. இதன் படி 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது. ஒட்டு மொத்த ஆசியாவிற்கே இந்த நிலை என்றால் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிலை? நமது நாட்டின் மொத்த மின்சகதியில் 50% வீதம் மின்சக்தியை தரும் நிலக்கரி 2020 க்கு பிறகு மிக பெரிய அளவில் குறைய தொடங்கும். அதாவது தற்பொழுது 96743.38 MW மின்சாரம் தரும் அனல்மின் உற்பத்தி தோராயமாக வருடம் ஒன்றிற்கு 2000MW குறைய போகிறது. இதை அணுமின் சக்தி இல்லாமல் வேறு எந்த சக்தி ஈடு செய்யும் என்பது பரலோகத்தில் மட்டும் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.

இது தவிர நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி எந்த அளவுக்கு குறைந்து கொண்டு இருக்கிறது என்ற விவரம் நான் சொல்ல தேவையில்லை. இருப்பினும் உலக வங்கியின் ஆய்வு படத்தை மேலே கொடுத்து உள்ளேன். 2020 க்கு பிறகு குடி நீரின் அளவு மிக வேகமாக குறைய போகிறது. கடல் நீரை குடி நீராக்கி பயன்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கும் அதிக அளவு மின்சாரம் தேவை. நமது மரபுசார் மின்சாரம் 2020க்கு பிறகு கேள்வி குறியாக போகும் நிலையில் அணுசக்தியை தவிர வேறு எந்த மாற்று சக்தி இதை செய்ய போகிறது. டாக்டர் பட்டத்தை வாங்கிய கம்யூனிஸ விஞ்ஞானிகளிடம் 1 பில்லியன் மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்ய ஏதேனும் தீர்வு உள்ளதா?

இதை எல்லாம் விட நமக்கு முன்பு இன்னொரு பிரச்சனையும் உண்டு. அது தான் நமது மக்கள் தொகை பெருக்கம், இதை எல்லாம் கட்டுபடுத்த முயற்சி செய்தால் சிறுபான்மை அடக்கு முறை என்று சொல்கிறார்கள். மக்கள் தொகை குறைப்பு ஒருவனுக்கு ஒருத்தி போன்ற சட்டங்கள் எப்படி சிறுபானமைக்கு எதிரானது என்பது செக்யூலர்வாதிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். கேரளா, உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்க பகுதிகளில் அதிக அளவு மனித உற்பத்தி ஏன் நடந்து கொண்டு இருக்கிறது என்பது எல்லாம் தெரிந்த கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே!!! மேல் சொன்ன அனைத்து பிரச்சனைகளும் அதிகம் உள்ள மாநிலங்களான கேரளா மற்றும் மேற்கு வங்கம் அதிபுத்திசாலி கம்யூனிஸ்டுகளால் தான் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர் கட்சியாகவோ இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அணு உலையை அனுமதிக்க மாட்டேன். மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்றால் என்ன செய்வது?

எதற்கு எடுத்தாலும் மரபுசாரா எரிசக்தியை உபயோகபடுத்தலாமே என்று சொல்லும் சில அரை வெக்காடுகளை வேறு நம் நாட்டில் உள்ளனர். மரபு சாரா எரிசக்தியில் முக்கிய இடம் வகிக்கும் காற்று மற்றும் சூரிய மின்சக்தி. இவை இரண்டுமே எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாத மற்றும் தொடர்ந்து கிடைக்க கூடிய விசயம் அல்ல.

Photovoltaic solar plant
 
 
Solar thermal power plant

53MW மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த photovoltaic solar தொழிற்சாலை ஜெர்மனியில் அண்மையில் கட்டப்பட்டது. இதற்கு செய்யப்பட்ட செலவு 220 million $. இதன் அடிப்படையில் கூடங்குள மின் உற்பத்தி திறனான 2000MW மின்சாரம் உற்பத்தி செய்யும் solar தொழிற்சாலை அமைக்க நமக்கு தேவை > 8500 million $. கூடங்குளத்திற்கு ஆன செலவோ < 3000 million $. இது நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

சரி இது வேண்டாம் solar thermal energy போகலாம் என்றால் அதற்கும் அணு உலையை விட 2 மடங்கு செலவு செய்ய வேண்டும். அதுவும் தவிர அந்த அளவுக்கு வெப்பம் தர கூடிய மற்றும் நில அமைப்பு தார் பாலைவனத்தில் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. இது போன்ற அதிகபடியான சூரிய மின்சக்தி சேகரிப்பால் ஏற்படும் வெப்பத்தினால் அதன் சுற்றுபுற பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் நிரந்தரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டும். அமெரிக்கா போன்ற மக்கள் தொகை குறைந்த நாடுகளுக்கே இது போன்ற தொழில் நுட்பம் சாதாராண விசயம் இல்லை. 2000MW மின்சாரத்தை அதுவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில் தற்போதைய நிலையில் சூரிய ஒளியில் உற்பத்தி செய்வது என்பது நடக்க கூடிய காரியமா? அதற்கு தேவையான தொழில் நுட்பத்தை அணு உலை ஆபத்து என்று சொல்லும் கம்யூனிஸ விஞ்ஞானி பத்மநாபன் போன்றவர்கள் தருவார்களா?

எப்பொழுதும் கிடைக்கும் சூரிய சக்திக்கே இந்த பாடு என்றால் காற்றாலைகளை பற்றியும் அது தரும் மின்சக்தி பற்றியும் நான் சொல்ல தேவையில்லை. ஆனால் நமது அரசாங்கம் இதை எல்லாம் விட்டு விடவில்லை. மரபு சார் மின்சக்தி மட்டுமே நமக்கு போதாது. அதனால் மரபுசாரா எரிசக்தியையும் நமது அரசாங்கம் ஊக்கபடுத்தி கொண்டு தான் இருக்கிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் நாம் உலகின் ஏழாவது இடத்தில் உள்ளோம். இதில் மேலும் குறிப்பிட தக்க விசயம் என்னவென்றால் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் கூடங்குளத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் உள்ள மாநிலங்கள் கடைகோடியில் உள்ளன. குஜராத முதல்வர் நரேந்திர மோதி மாநிலம் அதில் முதல் இடத்தில் உள்ளது.

இது தவிர நீர் மின்சக்தி திட்டத்தை பற்றி இங்கு நான் சொல்லியே ஆக வேண்டும். கம்யூனிஸ கை கூலியும் புனித ஆவிகளுக்கு பிடித்தவரும் 24x 7 ஆங்கில ஊடக ரௌடிகளின் கதாநாயகியுமான மேதா பட்கர் அப்பாவி கிராம மக்களை ஏமாற்றி பிரச்சனை செய்து பல ஆயிரம் ஏக்கர் நில பாசன மற்றும் 3000 MW மின் உற்பத்தி தரும் மின் உற்பத்திக்கு எவ்வாறு முட்டுகட்டையாக இருந்து அப்பாவி கிராம வாசிகளை ஏமாற்றி இந்திய அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உருவாக்கினார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்களா என்ன? இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மாவோயிஸ்டுகளா மாற்றி சீனாவிடம் இவர்கள் கல்லா கட்டினார்கள் என்பது வேறு விசயம். இந்த பக்கம் அணுமின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த வெளி நாட்டு கை கூலிகள் அந்த பக்கம் சென்று நீர்மின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கேட்டால் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்வது, இதை படம் பிடிக்க Times Now, CNN-IBN மற்றும் NDTV போன்ற வெளி நாட்டு தொலைக்காட்சிகள் வேறு.

இந்த மேதாபட்கர்க்கு உலக அளவில் கொடுக்கப்பட்ட சில விருதுகளே இவர் யார் என்று காட்டு கொடுத்துவிடும், Amnesty International (இங்கிலாந்து உளவு துறையின் பினாமி அமைப்பு) கொடுத்த விருது – Human Rights Defender’s Award Vigil India Movement. (Ecumenical Christian Centre Center) கொடுத்த விருது – M.A. Thomas National Human Rights Award இது தவிர வெளி நாட்டு NGO க்கள் இவருக்கு பல வித விதமான விருதுகளை வழங்கியுள்ளது.

இது மட்டுமா?  இப்பொழுது நீர் மின் சக்தி போன்ற இயற்கை சக்தியை பயன்படுத்தாலாம் என்று அறிவுரை கூறும் இதே கூட்டம் அன்று அருந்ததி சூஸ்னா ராய் அணை கட்டுகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது அவள் பின்பு கோஷ்ம் போட்டது.

சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு மக்கள் இறப்பார்கள் என்று சொல்லும் அதே கூட்டம் கேரளாவில் நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று சொல்பவர்களை முட்டாள்கள் என்று சொல்கிறார்கள்.

நமது கம்யூனிஸ மற்றும் கிறித்துவ அறிவு ஜீவிகள் இந்தியாவின் மின்சக்தி வரைபடத்தை காட்டி அணு உலையால் நமக்கு வெறும் 3 சதவிகிதம் மின்சக்தி வருவதாகவும் அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின்சக்தியால் தான் மீதம் உள்ள 80% வருவதாக கூறுகிறார்கள். என்னுடைய கேள்வி இருக்கின்ற மின்சக்தி போதவில்லை என்பதால் தானே இந்த அணு உலை. ஆனால் இந்த அனல் மின்சக்திக்கு ஆதாரமான நிலக்கரி போன்ற எரிபொருட்கள் எதிர் காலத்தில் குறைவாக தான் கிடைக்கும் என்பது இந்த அதிபுத்திசாலிகளுக்கு தெரியாதா? ஒரு அணுமின் நிலையம் கட்ட 10 வருடங்களுக்கு மேல் தேவைபடும் பொழுது இப்பொழுது இருந்தே நாம் தயார் படுத்தி கொண்டால் தானே எதிர் கால பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

சில அறிவு ஜீவிகள் சூரிய மற்றும் நீர் மின் சக்தியை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதை வைத்து எத்தனை நாள் காலம் தள்ள முடியும். சூரிய மின்சக்தியை வைத்து ஒரு ஐந்து தொழிற்சாலைகளை கூட நடத்த முடியாது. தற்பொழுது நீர்மின் சக்தியை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் இந்த கூட்டம் ஆக்கபூர்வமான நர்மதா நதி நீர்மின் சக்தி திட்டங்களுக்கு பிரச்சனை செய்வது ஏன்?

சில முட்டாள்கள் ஜெர்மனி இனி அணு உலைகள் கட்ட போவது இல்லை இப்பொழுது உள்ள அணு உலைகளையும் மூட போகிறதுஎன்று சொல்கிறார்கள். ஜெர்மனியின் மக்கள் தொகை என்ன? நமது மக்கள் தொகை என்ன? அவர்களுக்கு தேவையான எரிசக்தியும் நமக்கு தேவையான் எரிசக்தியையும் ஒப்பிடுவது யானையையும் பூனையையும் ஒப்பிடுவதற்கு சமம். இது தவிர அவர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக அணு உலைகளை ஏற்கனவே அமைத்து கொண்டுள்ளனர். இனி எதற்கு அவர்களுக்கு புதிய அணு உலை.  அடுத்து ஜெர்மனி மூடியதாக சொன்ன அணு உலைகளின் பட்டியல் கீழே….

Decommissioned power and experimental reactors

மேலே உள்ள படத்தில் இருக்கும்  தகவல்களை வைத்து ஒரு 10 வகுப்பு பையன் கூட சொல்வான் இது எதானால் மூடப்படுகிறது என்று. இந்த அணு உலைகள் அனைத்துமே மிக பழமையானவை. அது மட்டும் இன்றி பெருமாபாலான அணு உலைகள் ரஷ்யாவால் ஜெர்மனியில் காலனி ஆதிக்கதின் பொழுது கட்டப்பட்டது. அது போன்ற அணு உலைகளையும் ஆய்வு அணு உலைகளையே ஜெர்மனி மூடியுள்ளது. ஆனால் மூடப்படாத அணு உலைகளை பாருங்கள். மூடப்பட்ட அணு உலைகளின் ஒட்டு மொத்த மின்சாரத்தை புதிதாக கட்டியுள்ள அவர்களின் ஒரு அணு உலை பூர்த்தி செய்து விடும்.

German nuclear power units

 

அது சரி பிறகு எதற்காக ஜெர்மனியின் இந்த நாடகம். இதில் அரசியலும் உண்டு, வியாபாரமும் உண்டு.  அணு உலைக்கும் ஈடான அளவு இலாபத்தை தர கூடிய மரபு சாரா எரிசக்தியான காற்றாலை மற்றும் சூரிய தகடுகள் ஜெர்மனியால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இதை பற்றிய தகவல் பதிவின் முதல் நிலையிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.  தங்கள் நிறுவனங்களின் வியாபார நோக்கத்திற்காகவே இவ்வாறு பொய் கதைகளை கட்டி விடுகிறது. இதற்காக தனது மறைமுக படையான பாதரியார் படைகளையும் உபயோகப் படுத்துகிறது. ஜெர்மனி தான் கூடம்குளம் அணு உலை பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன.       

Sonnteg Reiner Hermann என்ற ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் அணு உலை எதிர்ப்புக்கு தலைமை தாங்கும் உதயகுமார் என்ற மேற்கத்திய கிறித்துவ உளவாளிக்கு கோடி கணக்கில் நிதி திரட்டி தருகிறார் என்ற உண்மை சமீபத்தில் வெளி வந்துள்ளது.

http://expressbuzz.com/states/tamilnadu/german-picked-up-for-koodankulam-funds-link/367692.html

மேலும் சோலார் தட்டுகள் உற்பத்திக்கு பெரிய தொழில் நுட்ப அறிவு தேவை இல்லை. இந்தியாவே எந்த நாட்டின் உதவியும் இன்றி அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். ஆனால் வெளி நாட்டு கிறித்துவ நாடுகளின் கம்பெனிகள் இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் நோக்குடன் அதில் உள்ளே நுழைய முயற்சி செய்தன. இதை உணர்ந்த மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. இதை எதிர்த்து கிறித்துவ நாடுகள் தனது ஐரோப்பிய யூனியன் மூலம் கண்டனம் தெரிவித்தது.

மதமாற்றம் என்ன விதமான கேடுகளை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஏன் என்றால் இங்கு இருக்கும் ஒவ்வொரு பாதரியார்களும் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் கட்டுபாட்டில் உள்ளனர். மதத்தை உபயோகித்து எவ்வாறு இலாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற உண்மை இதன் மூலம் தெரிகிறது. தற்பொழுது 1 மில்லியன் டாலர்கள் மதமாறத்திற்கு செலவு செய்து ஒரு சில வருடங்கள் பிறகு 100 மில்லியன் எடுப்பார்கள். இனி மேலாவது நமது மக்கள் இதை உணர்ந்து மதமாற்ற கிருமிகளில் இருந்து தங்களை பாதுக்காக்க வேண்டும். இல்லாவிட்டால் நமது நாடு ருவாண்டா போன்று ஒரு பெரிய கலவரத்தை சந்திக்க நேரிடும்.

உலகில் நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள்

உலகில் அணு உலைகள் உள்ள பகுதிகளின் வரைபடம்

 
நம்மை விட மிக மோசமான நிலபகுதிகளை கொண்ட ஐரோப்பாவிலேயே எத்தனையோ அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் பொழுது அதை விட பல மடங்கு பாதுகாப்பான நமது நிலப்பரப்பில் இருக்கும் அணு உலைகளுக்கு என்ன பிரச்சனை வந்து விட போகிறது.
 

மேலே உள்ள படங்களே போதும் இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் மதவாத கூட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள. கூடங்குளத்தில் உள்ள கிறித்துவர்களை பாதுகாக்க தான் கத்தோலிக்க அமைப்புகள் போராடுவதாக சிலர் சொல்கிறார்கள். ஒரு இந்திய மாநிலத்தின் அளவே இருக்கும் பல ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் இந்தியாவிற்கு இணையாக அணு உலைகளை வைத்து உள்ளனவே? அவற்றை எல்லாம் மூட வேண்டும் என்றும் அங்குள்ள கத்தோலிக்க மக்களை காப்பாற்ற வேண்டும் என்று போப் ஏன் போராடவில்லை. ஒரு வேலை ஆப்பிரிக்காவில் பசிக்கு போராடும் மதம் மாறிய கிறித்துவர்களுக்கு உதவி செய்யாமல் இந்தியாவில் இருக்கும் மக்களை மதம் மாற்ற பணத்தை கொட்டுவதை போல் மதம் மாறிய கத்தோலிக்க ஐரோப்பிய கிறித்துவர்கள் செத்தால் நமக்கு என்ன மதம் மாறி கொண்டு இருக்கும் இந்தியர்கள் தான் முக்கியம் என்று கத்தோலிக்க வாடிகன் நினைக்கிறதோ என்னமோ?

அணு ஆயுத சக்தி இல்லாததால் நாம் 1962ல் சீனாவிடம் இழந்தது மிக அதிகம். மீண்டும் அது போன்ற சூழ்நிலையை தவிர்க்கவும், எதிர்காலத்தில் நிலக்கரி போன்ற வளங்கள் குறைபாட்டால் நமக்கு ஏற்படக் கூடிய மிகப் பெரிய மின்சார பற்றாகுறையை தவிர்க்கவும் அணு உலைகள் மிக அவசியம். அதை விட அவசியம் நமது நாட்டில் மர்மமான முறையில் தற்கொலை என்ற பெயரில் இறந்து கொண்டு இருக்கும் நமது விஞ்ஞானிகள்.

கூடங்குளம் நாட்டின் கடை கோடியில் மிக பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணு உலை நாட்டின் கடை கோடியில் அதாவது இந்திய பெருங்கடலில் நமது பாதுகாப்பையும் ஆளுமையையும் அதிகரிக்க கூடியது. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை (அதாங்க அனல் மின்சக்தி, நீர் மின்சக்தி, பெட்ரோல்) தீர்க்க மிகவும் அவசியம். அது மட்டும் இன்றி இந்த கூட்ங்குளம் அணு உலை மூலமாக தான் நாம் வருங்காலத்தில் அணு ஆயுதங்கள் தயாரித்து நமது நாட்டையும் வீட்டையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும்.

உலகிலேயே மிகப் பெரிய யுரேனிய கனிமவளம் ஆந்திராவில் (49000 டன்) உள்ளது என்பதை மத்திய அரசு வெளியிட்டது. இந்த யூரேனியம் மற்றும் ராம சேதுவினால் நமக்கு கிடைக்கும் கடற்கரை கனிம வளத்தின் மூலம் நமது எதிர் கால மின்சக்தி தேவை பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பும் நமக்கு கிடைத்து உள்ளது

வெளி நாட்டு தீய சக்திகளுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே உதயகுமார் மற்றும் கிறித்துவ மிஷினரிகள் செயல்படுகின்றன. இந்தியாவை முடமாக்க முயலும் இவர்களின் முயற்சியை முறியடிக்க சாதி மதம் மொழி என்று வேறுபாடு பாராமல் நாம் ஒன்றினைந்து போராட வேண்டும். அணு உலை மின்சாரம் மட்டும் அல்ல. அணு ஆயுதமும் நமக்கு மிக அவசியம். இது அடுத்தவரை தாக்க அல்ல. நம்மை பாதுகாக்க….

“பாம்பு தன்னிடம் விஷம் இல்லாவிட்டாலும் அது விஷம் உள்ளதாக காட்டி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அதை கொன்று விடுவார்கள்” – சாணக்கியர்

  1. Parimala
    February 28, 2012 at 10:27 am

    கடல் நீரை குடி நீராக்கி பயன்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கும் அதிக அளவு மின்சாரம் தேவை.

    OTEC தொழில்நுட்பம் கொண்டு கடல் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் அதே சமயம் நல்ல குடி தண்ணீரும் பெற முடியும்.நம்ம தனுஷ் கோடியில தயாரிக்க திட்டம் உள்ளதா செய்தி வந்துள்ளது.

    கூடங்குளத்திற்கு ஆன செலவோ < 3000 million $. இது நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.
    //இதில் எந்த எந்த செலவுகள் அடக்கம் – அணு உலை அமைப்பு,மாதத்திற்கு எவ்வளவு செலவு,அதன் ஆயுள் காலத்திற்கு அப்புறம் மூட எவ்வளவு செலவு என விரிவாக சொல்லுங்க.முக்கியமாக அணு உலை கழிவுகளை எப்படி பாதுகாக்க போறீங்க.அதற்க்கான செலவு என்ன ? 1000 மெகா வாட் திட்டத்தில் எவ்வளவு மின்சாரம் உண்மையில் கிடைக்கும்?

    சூரிய சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஒரு முறை செய்யும் முதலீடா இல்லையா தெளிவு படுத்துங்க.

    சமீபத்தில் தமிழக மின்சார வாரியம் 60000 வீடுகளுக்கு,தெரு விளக்குகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் கொடுக்க போவதாக செய்தி வந்துள்ளது.இது சாத்தியம் ஆகும் போது,சூரிய சக்தியிலிருந்து அந்த அந்த பகுதிகளுக்கு தேவையான மின்சாரம் தயாரிக்க ஏன் முடியாது?

    //சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு மக்கள் இறப்பார்கள் என்று சொல்லும் அதே கூட்டம் கேரளாவில் நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று சொல்பவர்களை முட்டாள்கள் என்று சொல்கிறார்கள்.

    நில நடுக்கம் ஏற்பட்டால் முல்லை பெரியாறு மட்டும் உடையாது, அதற்க்கு கொஞ்ச தூரத்தில் உள்ள இடுக்கி அணையும் உடையும் என்பதை மட்டும் மறைத்து,முல்லை பெரியாறு மட்டுமே பிரச்சினை என்று சொல்பவர்களை தான் நாம் இங்கு நமக்கு எதிராக சதி செய்கிறார்களோ என நினைக்க தோன்றுகிறது.

    //ஆனால் இந்த அனல் மின்சக்திக்கு ஆதாரமான நிலக்கரி போன்ற எரிபொருட்கள் எதிர் காலத்தில் குறைவாக தான் கிடைக்கும் என்பது இந்த அதிபுத்திசாலிகளுக்கு தெரியாதா? ஒரு அணுமின் நிலையம் கட்ட 10 வருடங்களுக்கு மேல் தேவைபடும் பொழுது இப்பொழுது இருந்தே நாம் தயார் படுத்தி கொண்டால் தானே எதிர் கால பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

    நம்மோட தேவை என்ன? வளர்ச்சி என்பது உங்கள் பார்வையில் என்ன? கார்,மொபைல் போன்,கம்ப்யூட்டர்,ஆடை ஏற்றுமதி,அழகு சாதன பொருட்கள் …
    இல்லை உணவு உற்பத்தி தன்னிறைவு அடைவதா? ஒரே வீட்டில் எத்தனை தொலைக்காட்சி பெட்டி,கம்ப்யூட்டர்,கார். மாதத்திற்கு எத்தனை புதிய ஆடைகள்.இவைகளை தயாரிக்கும் தொழிச்சாலைகளுக்குதானே பன்னாட்டு கம்பனி என்ற அளவில் மின்சாரம்,நிலம்,நீர் ஆகியவை கொடுககபடுகிறது.அது ஏன் நம்மால் விவசாயம் மற்றும் நம் மண் ,வாழ்க்கை சார்ந்த தொழில்களை ஆதரிக்கவில்லை? இந்த பன்னாட்டு கம்பனிகளுக்கு கொடுக்கும் மானியம் மற்றும் பல சலுகைகளை நம் விவசாயம் சார்ந்த உணவு பதபடுத்தல் போன்ற தொழில்களை ஊக்குவிதால் வேலை வாய்ப்பு பெருகாதா?

    //மதமாற்றம் என்ன விதமான கேடுகளை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

    ஒரு மனிதன் எந்த மதம் பின்பற்ற வேண்டும் என்பது அவனுடைய விருப்பம்.கிறித்துவ நிறுவனங்களை குறை சொல்லும் நாம் அதே கிறித்துவ நிறுவனங்கள் செய்யும் பல்வேறு உதவிகளை ஏன் மறுக்க வில்லை? இந்த நாட்டிற்கு கிறித்துவத்தை பின்பற்றிய ஒரு அன்னை தெரசா தான் கிடைத்தார்.எல்லா மதங்களை பின்பற்றுபவர்களிலும் நல்லவர் கேட்டவர் உண்டு.

    இந்த போராட்டம் மதங்களை கடந்து நடக்கும் ஒரு போராட்டம்.தன்னோட சந்ததி அழியும் வாழ்வாதாரம் பறிபோகும்,தானே அழிந்து போவோம் என்ற நிலையில் கூடி போராடுகிறார்கள்.இந்த மக்கள் கூட்டம் எந்த பிரச்சினைகளுக்கு ஏன் ஈழ பிரச்சினைகளுக்கு கூட இப்படி கூடியது இல்லை.ஏன் என்றால் மனிதன் சுயனலமானவந்தான்.முல்லை பெரியாருக்கு அந்த ஐந்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் போராடினார்கள் முழுமூச்சாக.அவன் அவனுக்கு பிரச்சினை என்றால் தான் போராடுவான்.இப்போ போய் கேரளாவிலும் ,மேற்கு வங்கத்திலும்
    அணு உலை வைக்க ஆதரவு திரட்டி விட்டு வாருங்கள் ,பிறகு தமிழத்தில் வைக்கலாம்.

    நீங்கள் எத்தனை கூடி குடுத்தாலும் இவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள்.

    உங்கள் கட்டுரையில் பல தகவல்களை திரட்டி உள்ளீர்கள்.சிறப்பு.ஆனால் ஒரு மாற்று கருத்தை,கருத்தால் தான் வெல்ல வேண்டும்,முட்டாள்,மூடன் என்ற கூறுவதன் மூலம் அல்ல.

    உங்கள் கட்டுரையின் அடிப்படையில் வளர்ச்சி பற்றி ,மக்கள் தொகை பற்றி,மரபு சாரா எரிபொருள் பற்றாகுறை பற்றி எல்லாம் கூறுகிறது.ஆனால் உலகம் முழுவது மின்சாரம் தேவை, அதே சமயத்தில் மக்களும் நிம்மதியாகா வாழ வேண்டும் என்ற அடிப்படையில்,அணு ஆயுதங்கள் அற்ற உலகம் வேண்டும்,இந்த பூமியில் மனித உயிர்கள் பல சந்ததிகள் தாண்டி வாழவேண்டும் என்ற விருப்பத்திலும் அணு சக்தியை மக்கள் எதிர்க்கிறார்கள்.அதே அடிப்படையில்தான் கூடங்குளம் மக்களும்,தமிழத்தின் மற்ற பகுதியிலிருந்து எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது.அதில் இருப்பது மனித தன்மை மட்டுமே.

    சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்றொரு பழ மொழி உண்டு.இயற்கை வளத்தை சரியான தேவைக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும். ஊதாரித்தனமான,உல்லாச வாழ்க்கை தேவைகளுக்கு அல்ல.கருப்பாக இருப்பதே பெரிய அசிங்கம் என்ற அளவில் fair and lovely விளம்பரம் காட்டபடுகிறதே,அது இந்த நாடு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? இந்த மாதிரி தயாரிப்புகள் பெருகுவதால் என்ன நன்மை? இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரும்பாலும் கிராமங்களுக்கும்,athiyavasiyamana விவசாயத்திற்கும் பயன்படவில்லை என்பதுதான் உண்மை.கிராமத்தில் உள்ள மக்கள் மின் விசிறி கூட இல்லாமல் இருப்பதால் தான்,நீங்களும் நானும் குளிர் சாதன அறையில் இருக்கிறோம்.

    • February 28, 2012 at 5:18 pm

      தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

      (௧) தொழிற் சாலைகளுக்கு தேவைப்படும் மின்சாரத்தை வீடுகளுக்காக உற்பத்தி செய்யப்படும் மின்சாரதோடு ஒப்பிட முடியாது. அதுவும் தவிர சூரிய மின்சக்தியில் முதலிடு அதிகம். அதில் வரவு ஆமை வேகத்தில் இருக்கும். வேகமான பொருளாதார சூழ்நிலையில் பொருட்களின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது உற்பத்தி செலவு அதிகரித்தாலோ தொழில் வளங்கள் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கோ அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கோ சென்றுவிடும். இதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி நாட்டை நாசமாக்கும். கலவரங்கள் தான் மிஞ்சும். இதனால் பாதிக்க படுவது ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்ல ஒட்டு மொத்த சமுதாயமும் தான்.

      வீட்டு மின்சாரத்தையும் ஒரு 50 குதிரை திறன் கொண்ட ஒரு மோட்டரை ஓட்டுவதற்கும் ஆனா மின்சாரத்தையும் ஒப்பிட முடியாது. வீட்டுக்கு மட்டுமே தற்பொழுது இருக்கும் சூரிய மின்சாரத்தை உபயோகபடுத்த முடியும்.

      (௨) \\முல்லை பெரியாறு மட்டுமே பிரச்சினை என்று சொல்பவர்களை தான் நாம் இங்கு நமக்கு எதிராக சதி செய்கிறார்களோ என நினைக்க தோன்றுகிறது.\\

      இதை பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதிவிட்டதால் நான் அதை பற்றிய ஒரு லிங்கை கொடுத்துவிடுகிறேன். அதில் எழுதப்பட்ட விசயங்களை நான் முழுமையாக ஏற்கிறேன்.

      http://indianrealist.wordpress.com/2010/01/16/mullaperiyar-dam-controversy-and-sabarimala/

      ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தொடங்க மூன்று நாட்கள் முன்பே பேருந்து போக்குவரத்து தொடங்கியதும், போலி தமிழ் வீரர்கள் அடக்கி வாசித்ததுமே இதற்க்கு சான்று.

      (௩) \\இந்த பன்னாட்டு கம்பனிகளுக்கு கொடுக்கும் மானியம் மற்றும் பல சலுகைகளை நம் விவசாயம் சார்ந்த உணவு பதபடுத்தல் போன்ற தொழில்களை ஊக்குவிதால் வேலை வாய்ப்பு பெருகாதா?\\

      தங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். சனாதன தர்ம வாழ்கையில் இயற்கையை சேதபடுதாமல் வாழ்வது தான் மிக முக்கிய ஒன்று. அதனாலேயே நதிகள் முதல் மரங்கள் வரை அனைத்தும் வழிபாட்டுக்கு உரியவையாக கருதபடுகின்றன.

      அதனால் தங்கள் கருத்தை என்னால் எதிர்க்க இயலாது. ஆனால் நீங்கள் சொல்லும் உலகம் எப்பொழுதோ மறைந்து விட்டது என்பது கசப்பான உண்மை.

      (௪) \\இந்த நாட்டிற்கு கிறித்துவத்தை பின்பற்றிய ஒரு அன்னை தெரசா தான் கிடைத்தார்.எல்லா மதங்களை பின்பற்றுபவர்களிலும் நல்லவர் கேட்டவர் உண்டு.\\

      யார் கேட்டது கிறித்துவர்களின் உதவியை. அவர்கள் என் சோமாலியவுக்கோ அல்லது எதியோபியவுக்கோ உதவி செய்ய வேண்டியது தானே? தெரசா எதற்கு இந்திய வந்தார் என்பதை பற்றி சற்று ஆராய்ந்தாலே உங்கள் கேள்விக்கு விடை தெரியும்.

      \\நாம் அதே கிறித்துவ நிறுவனங்கள் செய்யும் பல்வேறு உதவிகளை ஏன் மறுக்க வில்லை?\\

      நான் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக தடை செய்வேன். கவலை வேண்டாம் 🙂

      \\.கருப்பாக இருப்பதே பெரிய அசிங்கம் என்ற அளவில் fair and lovely விளம்பரம் காட்டபடுகிறதே,அது இந்த நாடு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? \\

      இதை செய்வது இந்திய மக்கள் அல்ல வெளிநாட்டு கும்பெனிகள். அதாவது நீங்கள் சொல்லும் கிறித்துவ நிறுவனங்கள். அதற்க்கு நம் ஆட்களும் ஏமாறுகிறார்கள்.

      (௫) \\ணு ஆயுதங்கள் அற்ற உலகம் வேண்டும்,இந்த பூமியில் மனித உயிர்கள் பல சந்ததிகள் தாண்டி வாழவேண்டும்\\

      நிர்வாண நாட்டில் ஆடைகள் அசிங்கம் என்று ஒரு பழமொழி உண்டு. நாம் எப்பொழுது அசருவோம். அடிக்கலாம் என்று நம்ம pangaaligal காத்துகொண்டு இருகிறார்கள். இந்த நிலையில் இது போன்று நீங்கள் பேசுவது உங்கள் அப்பாவி தனத்தையும் வெளுத்து எல்லாம் பால் என்று நினைக்கும் உள்ளதையும் காட்டுகிறது, ஈரான் உலகிலேயே அதிக எரிசக்தி கொண்ட நாடு. அவர்கள் என் அணுவுலை கட்டுகிறார்கள். என் அங்கு மக்கள் இந்த அணுவுலைக்கு போராட வில்லை?

      \\கிராமத்தில் உள்ள மக்கள் மின் விசிறி கூட இல்லாமல் இருப்பதால் தான்,நீங்களும் நானும் குளிர் சாதன அறையில் இருக்கிறோம்.\\

      நான் குளிர் சாதன அறையில் இல்லை 🙂

  2. jay
    February 28, 2012 at 12:11 pm

    great analysis.. well done sir..

  1. No trackbacks yet.

Leave a comment