Home > Uncategorized > பைத்தியமாக்கப்பட்ட ஒரு அப்பாவி இந்தியன்

பைத்தியமாக்கப்பட்ட ஒரு அப்பாவி இந்தியன்

 

தமிழினத்தையே அழிக்க கூடிய கூடம் குளம் அணு உலையை தடுக்க கோரி மன்மோகனிடம் மனு கொடுக்க சென்றேன்.   அதிஷ்டவசமாக எனக்கு அனுமதியும் கிடைத்தது. ஏற்கனவே தோழர்கள் புத்தகம் அதிகம் படித்ததன் காரணமாக பேசுவது ஒன்றும் பெரிதான விசயம் அல்ல. என்னுடைய பேச்சை கேட்டு ஆச்சரியம் அடைந்த மன்மோகன் சிங், அணு உலையில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா என்று ஆச்சரியப்பட்டு, உடனடியாக அந்த திட்டத்தை நிறுத்துவதாகவும் அதற்கு முன் வேறு முறையில் எரிசக்தி உருவாக்கும் முயற்சியை பற்றிய ஒரு ஆய்வை மேற் கொள்ளுமாறு என்னிடம் கேட்டு கொண்டார். இதற்காக ஒரு 500 கோடி நிதியையும் வழங்கினார். அணு சக்தி போன்ற ஆபத்து இல்லாத மின் சக்தி உற்பத்தி செய்யும் விசயங்களை பட்டியலிட்டேன்.

முதலில் நான் தேர்ந்தெடுத்தது நீர் மின்சக்தி. சரி நீர் மின் சக்தி வேண்டும் என்றால் அணை கட்ட வேண்டும். அதனால் நதியில் அணை கட்டலாம் என்று போனேன். அணை கட்டினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்க படும், அவர்களால் காலம் காலமாக வாழ்ந்த பகுதியை மத்திய ஏகாதிபத்திய அரசு ஆக்கிரமிக்கறது. அதனால் அணையை கட்ட விடமாட்டோம் என்று மேத்தா பட்கர் தலைமையில் தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் அந்த திட்டத்தை கைவிட்டேன்.

 

 அடுத்து அனல் மின் சக்தியை பயன் படுத்தாலம் என்று அதற்கான திட்ட வரைவை உருவாக்கலாம் என்று போனேன். அங்கு சென்றால் நீர் மின் சக்தியை விட அங்கு பிரச்சனை அதிகம். முதலில் எழைகள் நிலங்களை அரசாங்கம் பிடுங்க பார்க்கிறது என்று என்னை தோழர்கள் தடுத்தார்கள். நிலக்கரி போன்ற பொருட்களை எடுக்க போனால்  பழங்குடியினர் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று செங்கொடி ஏந்திய மக்கள் சூஸ்னா அருந்ததி ராய் தலைமையில் போராடினார்கள்.அதானல் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 

 சரி இது எல்லாம் வேண்டாம் பிரச்சனையே இல்லாத சோலார் தட்டுகளை உருவாக்கலாம் என்று அதிகாரிகளை கேட்டேன். அதற்கும் அதிக அளவு நிலக்கரி தேவை படுகிறது. அதற்கும் தோழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அது தவிர நம்மிடம் அதை உருவாக்கும் தொழில் நுட்பம் கிடையாது. இதை வெளி நாட்டில் இருந்த தான் கொண்டு வர முடியும். வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கும் வருவதை தோழர்கள் விரும்ப மாட்டார்கள். அது மட்டும் இன்றி இதற்கும் மிக பெரிய இடம் தேவை. இதற்கும் கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவார்கள். அப்புறம் பிரிந்தா கரத் சிகப்பு சேலையை கட்டி கொண்டு விஜய் மாதிரி ஒரு காட்டு காட்டுவார் பரவாயில்லையா என்றார்கள். அதனால் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 

 சரி சானியில் இருந்தாவது மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று மாட்டு பண்ணை வைத்து  மாடுகளை கொல்லவதை தடுக்கும் சட்டம் கொண்டு வந்தால் இது பார்பணீய சட்டம். ஹிந்து பாசிஸ்டுகளின் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அலுவலம் முன்பு மாட்டு கரியோடு உட்கார்ந்து கொண்டார்கள்.

 மேற்கத்திய நாடுகளை போன்று நாமும் பிற நாட்டின் வளத்தை ஆட்டைய போடலாம் என்று இராணூவ அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். இதை கேட்ட அவர் கேக்க பெக்க என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார். காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலத்தில் ஆயிர கணக்கான மக்களை கொல்லும் பிரிவினை வாதிகளை கைது செய்தாலே மனித உரிமை என்று கொடி பிடிக்கும் கம்யூனிஸ்டு தோழர்கள் அடுத்த நாட்டை தொட்டால் சும்மாவிடுவார்களா? அதுவும் சுற்றி இருப்பது முஸ்லீம் நாடு. ஓட்டு வங்கி பாதிக்கும் என்று உங்களை ஒரு வழி செய்து விடுவார் கம்யூனீஸ்டு தலைவர் ப்ரகாஸ் கரத்தும் அவருடைய சகல ப்ரனாய ராயின் தொலைக்காட்சி NDTV யும்  என்று என்னை எச்சரித்தார்.

 

 இது எல்லாம் வேண்டம்… மக்கள் தொகையை குறைத்து இருக்கிற மின்சாரத்தை யாவது ஒழுங்காக பயம் படுத்தலாம் என்று நினைத்தால் இது சிறுபானமைக்கு எதிரான திட்டம். யார் எத்தனை குழந்தைகள் பெற்று கொள்வது எத்தனை திருமணங்கள் செய்து கொள்வது போன்றவை அவரவர் விருப்பம். இது சிறுபானமை மத சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்று கூறி நரேந்திர மோடி போல் உங்களையும் மத வெறியன் என்று சொல்வார்கள். இது தவிர இதனால் ஏற்படும் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடும் சிறுபானமை சமூகத்தவர் யாராவது காவல் துறை சுட்டு கொன்றால் உங்களை ஹிட்லராக்கி உங்களுக்கு அமெரிக்க விசா கிடைக்காமல் செய்துவிடுவார்கள்…

 சரி காற்று மூலமாவது மின்சாரம் தயாரிக்கலாம் என்றால் அதில் வரும் மின்சாரம் போதாது. அதுவும் தவிர அது தொடர்ச்சியாக மின்சாரம் தறாது. அப்படி மின்சாரம் ஒழுங்காக வராவிட்டால். சாலை மறியல் செய்து உங்கள் உருவ பொம்மையை எரிப்பார்கள் என்றார்கள்.

 

இப்படி முன்ன போன உதைக்கிராங்க, பின்ன வந்தா கடிக்கராங்க… இப்படி எந்த பக்கம் போனாலும் போராட்டம் நடத்துறாங்களே இதற்கு எதாவது தீர்வு காண யோசித்து யோசித்து பைத்தியம் ஆனேன். தற்பொழுது தான் கொஞ்சம் தெளிந்து உள்ளேன். தயவு செய்து கம்யூனிஸ்டு கழுதைகள் பேச்சை கேட்டு சிந்திக்க தொடங்கி எதாவது செய்ய தொடங்கினால் என்ன போல நீங்களும் பைத்தியம் ஆக நேரிடும் ஜாக்கிரதை…

 

 – இப்படிக்கு

முன்னாள் கழுதை (தோழர்)

Categories: Uncategorized
  1. November 22, 2011 at 6:59 am

    இன்றைய அரசாங்கங்களின் தலைவலியே இதுதான். அதை நகைசுவையாக சொல்லிவிட்டேர்கள். ஆனால் மக்களுக்கு எங்கே புரியப்போகிறது?

  2. November 22, 2011 at 11:36 am

    Very Nice.

  3. Vasanth
    November 23, 2011 at 7:32 am

    Very nice story There is nothing we can do other than waiting until these people correct their attitude. It might take years, decades or even centuries for that to happen. Till then be Patient !

  4. Diwakar
    December 5, 2011 at 3:53 pm

    Nice article

  1. No trackbacks yet.

Leave a comment